தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தொடர்பில் உடனடியாக நாட்டிற்கு வௌிப்படுத்த வேண்டும் என மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய போதிலும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஒரு மாத காலமாக கூறி வந்தது.
திடீரென தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர். ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்குவதற்கு தேவையான 113-க்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு என்ன? தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேன்கூட்டை உடைப்பது கையை சுவைப்பதற்காக அல்லவென்பதை நாம் அறிவோம்.
அதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாடு தொடர்பில் உடனடியாக நாட்டிற்கு வௌிப்படுத்த வேண்டும்“ என கோரியுள்ளார்.
No comments:
Post a Comment