ஜனாதிபதியின் முடிவில் மாற்றம் இல்லையாம்! ரணிலை பிரதமராக்கவே மாட்டாராம்.
நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கக் கடப்பட்டுள்ளேன். ஆனால் ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பாதுகாக்க நான் எடுத்த முடிவில் மாற்றம் செய்ய மாட்டேன்.
இவ்வாறு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த - ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்ததாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்ப அபயரட்ண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், தாங்கள் எடுத்துள்ளது மக்கள் சார்ந்த தீர்மானம் என்றும் மக்களுக்கு தேர்தல் ஒன்றை வழங்குவதற்காக தாம் எடுத்த முயற்சியை நீதிமன்று தடுத்துள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எவருக்கும் தொடர்ந்தும் விருப்பம் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்
0 comments :
Post a Comment