ஊழல் வழக்கில் பாக் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கு ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடுகளில் அளவுக்கு அதிகமாக பணம், சொத்து குவித்து வைத்துள்ள உலக பிரபலங்களின் பெயர்களை பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டது. அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து நவாஸ் ஷெரீப், பிரதமர் பதவி இழந்தார்.
இந்நிலையில், லண்டனில் பிளாட்டுகள் வாங்கியது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, ஊழல் செய்த வழக்கு ஆகியவை நவாஸ்க்கு எதிராக பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் சமர்பிக்குமாறும் கூறிய ஆவணங்களை ஒப்படைக்க ஒருவாரம் அவகாசம் கேட்டு , நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் மனு அளித்தார். ஆனால் அதனை நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடந்தது. இதில் நீதிபதி அர்ஷத் மாலிக் அவர்கள் நவாஷ் ஷெரிப்புக்கு எதிரான ஆதாரங்களில் அடிப்படையில் அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
தண்டனை வழங்கப்படும்போது நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments :
Post a Comment