போதைப்பொருள் தடுப்பு பிறிவினரால் நேற்றிரவு பலப்பிட்டிய - பேருவளை கடற் பிரதேசத்தில் வைத்து பாரிய தொகை ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 234 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய தொகையாகும்.
கடற்படையினரின் ஒத்துழைப்புடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இவற்றின் பெறுமதி சுமார் 2777 மில்லியன் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களுடன் அவர்கள் பயணித்த படகும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 34 வயதுடைய இரண்டு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment