புலிகளால் யாழ்பாணத்திலிருந்து விரட்டப்பட்ட மகேஸ்வரனின் மனைவி விஜயகலா மகேஸ்வரன் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என தெரிவித்து சட்டச் சிக்கலை எதிர் நோக்கியுள்ளார். சர்சைக்குரிய இக்கருத்துக்கு எதிராக திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸ் பிரிவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இது தொடர்பான வழக்கு அழைக்கப்பட்ட போது , வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலேனை கேட்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை கிடைக்கவில்லை என்று விசாரணைகளை மேற்கொள்ளும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து சட்ட மா அதிபருக்கு நினைவூட்டல் அறிவிப்பு ஒன்றை விடுக்குமாறு உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வடக்கின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழீழ விடுதலைப் புலிகளின் கை மேலோங்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார்.
விஜயகலா மகேஸ்வரனின் இந்த கருத்தானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment