19 ஆபத்தில்! ஓழிப்போம் என்கிறது ஒருதரப்பு, காப்போம் என்கிறது மறுதரப்பு.
அரசியல் யாப்பின் 19 திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கிருந்த நிறைவேறு அதிகாரங்கள் சில ஒடிக்கப்பட்டது. அதுவே இன்று நாட்டில் சர்சையுமாகியுள்ள நிலையில், தாம் ஆட்சிக்கு வந்தால் அதனை இல்லாதொழிப்போம் என பாராளுமன்ற அமைச்சர ல்ஸ்மன யாபா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லை தாமரை தடாகத்தில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் மத்திய நிலையத்தில் நடைப்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளார்.
19வது சீர்த் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வாக்களித்ததை இட்டு தற்போது கவலை தெரிவிப்பதகாவும் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியையும் மாற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாம் இச்சீர்திருத்தத்திற்கு சார்பாக வாக்களித்தமைக்கான காரணம் ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் இன்றைய அரசியல் நடவடிக்கைகள் மக்களின் வாக்குரிமையை இழக்கச் செய்துள்ளதோடு ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
வரும் பொது தேர்தலில் தமது கட்சி பெரும்பான்மை பலத்தை பெற்று 19வது சீர்திருத்தத்தை மாற்றி நாட்டினை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மக்களுக்கு கொடுத்த ஆணையின் பிரகாரம் ஜனநாயகத்தை நிலைநாட்டும் பொருட்டு கொண்டுவரப்பட்ட 19 ம் திருத்தச் சட்டத்தை தாங்கள் பாதுகாப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
மறுபுறத்தில் 19வது திருத்த சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதன் ஜனநாயக குணாம்சங்களை பாதுகாத்து நாடாளுமன்ற நடைமுறைக்கமைய திருத்தங்களை மேற் கொள்ள தான் தாயார் என கௌரவ ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
19வது திருத்த சட்டம் நாட்டில் நிலவும் ஜனநாயக ரீதியான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நிறைவேற்றப்பட்டது. இதனூடாவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை ஜனநாயக ரீதியிலான நிறுவன கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான பெறுபேறுகளினை இலங்கை சழூகம் அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment