சுனாமிப் பேரழிவு 14ம் ஆண்டாக நினைவு கூரப்படுகின்றது.
2004ம் ஆண்டு மார்கழி மாதம் உலகையே சோகத்தில் ஆழ்த்திய நாள். அன்றுதான் இயற்கை சீற்றம் கொண்டு மாபெரும் அழிவொன்றை மனித குலத்திற்கு கொடுத்தது. பல்லாயிரக்கணக்கான உயிர்களை இலங்கையின் கரையோரம் எங்கும் வாழ்ந்திருந்த மக்கள் பறிகொடுத்தனர்.
இத்தாக்கத்தின் நினைவுகளை இன்று நாடெங்கிலுமுள்ள மக்கள் நினைவு கூறுவதுடன் உயிரிழந்த மக்களின் ஆத்த சாந்தி வேண்டியும் பிரார்த்தித்து நிற்கின்றனர்.
அந்த வகையில் இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுக்கான இரு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான இந்நிகழ்வினை யாழ் மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.
யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில், அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகின் பிரதி பணிப்பாளர் ரவி சங்கரப்பிள்ளை தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் யாழ் பல்கலைக்கழகத்திலும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக உபவேந்தர் விக்னேஸ்வரன் உட்பட விரிவுரையாளர்கள் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் வடமராட்சி கிழக்கு- உடுத்துறை சுனாமி நினைவாலயத்திலும் உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.
0 comments :
Post a Comment