ரணில் போல் த.தே கூட்டமைப்பிற்கு ஆமா போட்டிருந்தால் மஹிந்தவாலும் 113 பெற்றிருக்க முடியும். விமல் வீரவன்ச
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்றிருந்தால் பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மையை இலகுவாகவே பெற்றிருப்பார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் :
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைத்த நிபந்தனைகளான சுயாட்சி முறைமை, காணி தொடர்பான வர்தத்மானி அறிவித்தல்களை ரத்துச் செய்தல், புராதன காணிகளில் எதுவும் செய்யலாம் என்ற அதிகாரத்தை மகாணசபைகளுக்கு வழங்குதல் போன்ற நாட்டிற்கும் வரலாற்று ரீதியான பெருமைக்கும் பங்கம் விளைவிக்க கூடிய நிபந்தனைகளை ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஏற்று கொண்டமையினாலேயே த.தே.கூட்டமைப்பு தனது ஆதரவினை அவருக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறு நாட்டிற்கும் தேசத்திற்கும் இனத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் செயற்படும் ஆட்சியாளனுக்கு நாட்டை ஒப்படைப்பது மிகவும் பயங்காரமான விளைவுகளுக்கு ஆரம்பமாக அமையும். ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்பார்ப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பும் சில நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் மட்டுமே. அவர்களின் இலக்குகளை அடைய ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வருகையையே எதிர்பார்க்கின்றனர்.
நாட்டுபற்றுடைய கலாச்சாரத்தை நேசிக்கும் தேசியதுவத்தை மதிக்கும் எவரும் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியை எதிர்பார்ப்பது இல்லை.
ஜனநாயகத்தை பற்றி பேசும் ஐக்கிய தேசிய கட்சியினரின் செயற்பாடுகளை லேக்கவுஸ் முன்னிலையில் காணக்கூடியதாக இருந்தது. ஊனமுற்ற நபர் ஒருவரின் தாங்கு கோலை பிடுங்கி லேக்கவுஸ் உத்தியோகத்தர்களை தெஹியோவிட்ட பிரதேச மந்திரி சுஜித்சந்தன தாக்கியதை காண்டோம். இவர்களா ஜனநாயத்தை காக்க போகிறார்கள். காட்டுமிராண்டிகளாக செயற்படும் இவர்களை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே மைத்திரி மஹிந்த ஆட்சிக்கான போராட்டத்தில் நாட்டையும் தேசியத்துவத்தையும் நேசிக்கும் மக்கள் அனைவரும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
0 comments :
Post a Comment