வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் பார்வையிடச் சென்ற அமைச்சர் 10000 ரூ வழங்க உத்தரவு.
கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார நேரில் சென்று பார்iவிட்டுள்ளார்.
பின்னர் இடர்முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட அமைச்சர், மேலதிக அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 10000 ரூ நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளின் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு 2.5 மில்லியன் ரூபாய்கள் வரை காப்புறுதியின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அமலநாதன் தெரிவித்துள்ளாhர் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் பல தற்காலிக வீடுகள் எனவும் அவற்றின் சேதம் மதிப்பிடுவது கஷ்டமாகையால் அவர்களுக்கு நிலையானதோர் நஷ்ட ஈட்டை வழங்கவேண்டும் எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பார்த்திபன் வேண்டுதல் விடுத்துள்ளார்.
0 comments :
Post a Comment