Monday, November 5, 2018

பூட்டிய அறையினுள் TNA - JVP பேச்சு.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைக்கு மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க, பிமல் ரத்னாயக்கவும், லால் காந்தவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

பிரதமர் பதவியில் ஏற்பட்டுள்ள மாற்றம் நாட்டில் அரசியல் குழப்பநிலைக்கு வித்திட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர ஐ.தே.க. தீர்மானித்துள்ளது.

இவ்விடயத்தில் நடுநிலை வகிக்கப்போவதாக மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், ஐ.தே.க.வின் பிரேரணையை ஆதரிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

ஜேவிபி யினருடன் சம்பந்தன்-சுமந்திரன் ஆகியோரால் பேசப்படும் விடயங்கள் யாது என இதுவரை சக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாதபோதும், ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தேடும் முயற்சியாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.





No comments:

Post a Comment