நாட்டின் இன்றைய அரசியல் நிலைமை எங்களை ஐ.நா வில் பலவீனப்படுத்தும். GSLF தலைவர்
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்தப்போக்கானது ஐ.நா வில் எம்மை பலவீனப்படுத்தும் என்பதுடன் இனவாதிகளுக்கு சாதகமா அமைந்து விடும் என உலக இலங்கையர் பேரவையின் தலைவர் சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
'முரண்பாடற்ற ஆட்சியை உருவாக்கி மக்களின் இறையாண்மையை காப்போம்'எனும் தொனிப்பொருளில் உலக இலங்கையர் பேரவையால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், தொடர்ந்து பேசுகையில் :
இன்றைய நாட்டின் அரசியல் சூழ்நிலையானது மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைப்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமை சம்மேளனத்தில் எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறோம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடினோம். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேசபற்றுள்ள இலங்கை வாழ் மக்களின் இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாகவும் உரையாடினோம். ஜெனிவா சம்மேளனத்தின் போது தமிழ் டயஸ்வோரவுடன் இணைந்து ஏனைய சார்பு நாடுகள் விடுத்த சவால்களுக்கு முகம் கொடுத்தோம்.
ஆனால் இன்று நாட்டின் அரசியல் சூழ்நிலையானது கவலைக்கிடமாக உள்ளது. உள்நாட்டில் அரசியல் தலைமைகளின் முறையற்ற செயற்பாடுகளினால் சர்வ்தேசமே கைக் கொட்டி சிரித்ததை நரம் நேரடியாகவே கண்ணுற்றோம்.
இன்றைய அரசாங்கத்தின் ஸ்திரமற்ற நிலையை வெளிநாட்டு தூதுவர்கள் பாராளுமன்ற செயற்பாடுகளின் போது கண்டுகொண்டனர். ஆளும் கட்சியினரும் எதிர்கட்சியினரும் ஒன்றினைந்து செயற்படும் நிலையில் இல்லை என்பதனை உணர்ந்தே அவர்கள் அவ்வேளையில் கைக்கொட்டி சிரித்து கொண்டிருந்தனர்.
அத்தோடு இச்சூழ்நிலையை பயன்படுத்தி நாட்டினுள் இனவதத்தை தூண்டிவிடவும் சிலர் முயற்சிக்கின்றனர். அதற்குஉதாரணம் தமிழகத்தில் இருந்து வருகை தந்த திருமாளவன்.
மார்ச் மாதம் 30 இடைக்கால பிரேணை ஒன்றினை முன்வைத்தனர். 2 வருடங்கள் அதற்கான கால எல்லையாக இருந்தது. அக்காலப்பகுதியில் பல தூதுவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அவர்கள் வந்து போன ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு எதிராகவே கருத்துக்களை முன் வைத்திருந்தனர். ஒட்டு மொத்த முடிவும் மார்ச் மாதம் வெளியிடுகையில் எல்லாம் எமக்கு எதிராகவே இருக்கும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் 2015-10-01 ம் திகதி அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட நாட்டிற்கு பொருத்தமற்ற கோரிக்கையை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறான அரசாங்கத்திடம் நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களையும் அரசியல் தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வரை கொண்டு சென்றபோது அமைதி காத்தது நல்லாட்சி அரசாங்கம்.
2015 ம் ஆண்டில் தமிழ் டயஸ்ஹோரா (புலிகள்) ரணில் விக்கிரமசிங்க உட்பட குழுவினருக்கு ஆதரவளித்தது. மீண்டும் அதற்கான முயற்சியே நடைகெறுகின்றது.
நாம் மக்களை கேட்டுக்கொள்ளவது அரசியல் தலைமைகளை விட மக்களே விழிப்புனர்வுடன் இருத்தல் வேண்டும். மக்களாட்சியை உறுதிப்படுத்த பொது தேர்தலை மக்கள் வலியுறுத்தல் வேண்டும். இல்லையென்றால் இனவாத்துக்கு தூண்டப்பட்டு நாடு பிளவுபடும். நாட்டினை அழிவுபாதைக்கு இட்டுச் செல்லும்.
ஆகவே நாட்டினை கூறுபோடாத ஒன்றிணைத்து செயற்படுத்தும் அரசாங்கத்தை தேர்தெடுத்து மக்களின் இறையாண்மையை பாதுகாத்தல் வேண்டும்.
0 comments :
Post a Comment