முன்னால் தபால் அமைச்சரின் BMW காரின் திறப்பை காணவில்லையாம். ஆட்டையை போட திட்டம்.
அரசினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டும் சுகபோகங்கள் ஏராளம். அதேபோல் பாராளுமன்றம் கலைக்ப்பட்டால் அமைச்சர்களின் சுகபோகம் அத்தனையும் அரசின் வசம். இந்நிலையில் முன்னாள் தபால் அமைச்சர் மொவறமட் ஹலிம்டின் BMW காரை திருப்பி பாரம்கொடுக்கவேண்டிய நிலையில் காரின் திறப்பு மாயமாகியுள்ளது.
அமைச்சரின் தின அலுவலகள் அத்தனையும் முடிவடைந்த பின்னர் சாரதியிடம் திறப்பை வாங்குவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென திறப்பு மாயமாகியுள்ளதென தெரிவித்துள்ளார் அமைச்சர். இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்கின்றனர் அமைச்சின் ஊழியர்கள்.
நிலையினை சமாளிக்க தடுமாறும் முன்னால் தபால் அமைச்சர் மாயமான திறப்பிற்கு சாரதியே பொறுப்பு எனவும், வாகன திறப்பை பெற தேவையான 150000 பணத்தை சாரதி செலுத்த வேண்டும் என மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment