எனக்கு பிரதமர் பதவி பெரிய விடயமே அல்ல. மஹிந்த பாராளுமன்றில் ஆவேசம்.
நேற்று பாராளுமன்று கூடியபோது பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு விசேட பேச்சுக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆச்சந்தர்பத்தில் குறுக்கிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரை பிரதமர் என்று விழிக்காது, குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டபோது, ஆத்திரமடைந்த மஹிந்த ராஜபச்ச, தான் புதிய பிரதமராய் பதவியேற்றாலும் இப்பதவி எனக்கு ஒன்றும் பெரிய விடயம் அல்ல என்று ஆத்திரத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அப் பதவியை ரணில் விக்கிரமசிங்கவை போல பெரிதாக எண்ணவில்லை. நான் இதற்கு முன்னரும் பிரதமராக கடமையாற்றி உள்ளேன். நேற்று பாராளுமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை பார்க்கும் போது அரசியல் வரலாற்றில் இருண்ட யுகமாகவே எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறான அமைதியற்ற சூழ்நிலையை ஒரு போதும் கண்டதில்லை.
கடந்த ஒக்டோபர் 26ம் திகதி வரையிலான காலப்பகுதியில் முன்னைய அரசாங்கத்தின் பல்வேறு ஊழல் நடவடிக்கைகளினால் மக்கள் பெரிதும் அதிருப்திக்கு உள்ளாகி இருந்தனர். மத்திய வங்கியின் கொள்ளை அரச செயற்திட்டங்களையும் வளங்களையும் வெளிநாட்டவர்க்கு தாரை வார்த்து கொடுத்தனர். மக்கள் மத்தியில் முன்னைய அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை முழுமையாக அற்றுபோனது.
இந்நிலையிலேயே ஜனாதிபதி அவர்கள் பிரதமராக என்னையும் புதிய அரசாங்கத்தையும் அமைக்க முனைந்தார். அதற்காகவே பொது தேர்தலையும் அறிவித்தார். ஆனால் அதற்கும் ஒரு தடை வந்தது. ஐ.தே.கட்சியும் ம.வி.முன்னனியும் மற்றும் பல கட்சிகள் ஓன்றினைந்து உயர்நீதிமன்றத்தினை நாடினர். இலங்கை அரசியல் வரலாற்றிலே முதன்முறையாகவே ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்பிற்கு எதிராக மனு முன்வைக்கப்பட்டது.
மக்களின் எதிர்பார்ப்பு நல்லதொரு அரசாங்கம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றாக கரம் கோர்ப்போம் என தனது உரையில் அவர் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment