ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் கேட்கவில்லை என்கின்றார் சபாநாயகர்.
புதிய பிரதமர் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்காததை சுட்டிக்காட்டி, அரசமைப்பின் 37.2 சரத்துக்கமைய பிரதம நீதியரசரின் அனுமதியுடன் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்கள், முப்படைகளினதும் கட்டளைத் தளபதி பொறுப்பு தனக்கு கிடைக்க வேண்டுமெனத் தெரிவித்து பிரதம நீதியரசர் நலின் ஜெயலத் பெரேராவுக்கு சபாநாயகரால் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்று சமூகவலைத்தளங்களில் நேற்று வெளியானது.
குறித்த கடிதம் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அலுவலகத்தினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில், சபாநாயகர் கரு ஜயசூரியவால் பிரதம நீதியரசருக்கு நேற்றைய தினம் (20.11.2018) அனுப்பப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கடிதம் ஒன்று உலாவருகின்றமை எங்களது அவதானிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இக்கடிதம் முற்றிலும் போலியானது என்பதுடன் அவ்வாறானதோர் கடிதத்தை சபாநாகர் அவர்கள் அனுப்பவில்லை என்பதை தெரிவித்துள்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment