தற்போது நாட்டில் நடைபெறும் அரசியல் மாற்றங்களை சமாதானமான முறையிலான பேச்சு வார்த்தைகள் மூலமாக தீர்த்து கொள்ளுமாறும், கலவரங்களை உருவாக்கி கொண்டால் சர்வதேச ரீதியான பல அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும் என அஷ்கிரிய பீடம் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரிஎல்ல, பாட்டலி சம்பிக ரணவக்க, ரவி கருனாநாயக்க, அலவதுவல, தயா கமகே, லகீ ஜயவர்தன, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அஷ்கிரிய மா சங்கத்தினரை சந்திக்கச் சென்ற போதே மாநாயக்க தேரர் இவ்வாறு கூறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியான அழுத்தங்களோ தலையீடுகளோ நாட்டினுள் வருமாயின் எல்லா கட்சியினரும் ஒன்றாக கரங் கோர்த்து செயற்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள அஷ்கிரிய மெதகம தம்மானந்த தேரர் குறிப்பிடுகையில் 'சர்வதேச ரீதியான அழுத்தங்கள் ஏற்ப்பட்டால் இரு கட்சியினரும் பேதங்களை மறந்து செயற்பட வேண்டும் எனவும், ஜனநாயகத்தை பாதுகாக்க விரைவில் பாராளுமன்றத்தை கூட்டுவதே உசிதம் எனவும் கூறியுள்ளார்.
அத்தோடு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை பாதுகாப்பது மிக முக்கியமாகும். இது தொடர்பாக கௌரவ ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்த பா, உறுப்பினர் லக்ஷ்மன் கிரிஎல்ல :
வெகு விரைவில் பாராளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் நாட்டின் பிரதமர் யார்? என அறிவது அவசியமாகும். சர்வதேசத்தின் பார்வை எம் அரசியல் நடவடிக்கை மீது உள்ளது. பிரதமர் யார், யார் அமைச்சரவை என்பது தொடர்பான தெளிவற்ற நிலை உள்ளது. என அவர் தெரிவித்தார்
அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்து நல்லுபதேசங்களைப் பெற்றதன் பின் கண்டி தலாதா வீதிவழியே ஊர்வலமாகச் சென்று கோசங்களை எழுப்பினர்.
சூழ்சிகார அரசு எமக்கு வேண்டாம், பின்கதவு பிரதமர் எமக்கு வேண்டாம், கொலைகார ஆட்சி எமக்கு வேண்டாம், பொய்யன் எமக்கு வேண்டாம் சுனாமியன் எமக்கு வேண்டாம்... என்றெல்லாம் கோசம் எழுப்பினர். ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியை மேலே காணலாம்.
No comments:
Post a Comment