Sunday, November 18, 2018

பிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி உடைப்பு.

கிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருந்த அதிநவீன நிலத்தின் கீழ் நான்கு பிரிவுகளைக் கொண்ட நிலக்கீழ் பதுங்குகுழி இராணுவத்தினரால் இன்று உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

14 SLNG படைபிரிவின் கட்டுப் பாட்டில் இருந்த இவ் பதுங்குகுழியே உடைக்கப்படுகிறது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வருகின்ற சுற்றுலாப் பயணிகள் இவ் பதுங்குகுழியை கடந்த வருடம் வரை பார்வையிட்டு வந்தனர் அது இவ் வருடம் முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ் உடைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி கோரிய போதும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப்பகுதி இராணுவத்தினரின் வசமுள்ள நிலையில் பதுங்குகுழி அகற்றப்படுகின்றமையால் குறித்த காணி விடுவிப்பிற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் அறியமுடிகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com