துணியில் புத்தரின் உருவப்படம். திருமலையில் இரு முஸ்லிம் வர்த்தகர்கள் கைது!
திருமலை நகர்ப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் புத்தர் உருவம் பதிக்கப்பட்ட துணி விற்பனை செய்த வர்த்தக நிலைய உரிமையாளர் உட்பட்ட இருவர் திருமலை பொலிஸாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த வர்த்தக நிலையத்திற்கு சென்ற பௌத்தர்கள் சிலரால் அங்கு புத்த பெருமானின் உருவப்படம் பொறிக்கப்பட்ட துணி விற்பனை செய்யப்படுவது அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு அசமந்த நிலை ஏற்பட்டதுடன், ஓர் கலவரத்துக்கான முனைப்புக்கள் தோன்றியுள்ளது.
இது தொடர்பான தகவலறிந்த பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்து, குறித்த வியாபரத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து நிலைமையை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளனர்.
இலங்கையிலே புத்தபெருமானின் உருவம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சர்சைகள் எழுந்துள்ளமையும், அவ்வாறு அவற்றை தவறாக பயன்படுத்தியமை குற்றமென நீதிமன்று தீர்பளித்த சம்பவங்களும் யாவரும் அறிந்த விடயம்.
இந்நிலையில் குறித்த வியாபாரிகள், தொடர்ந்தும் இவ்வாறு பொறுப்புணர்வற்ற செயற்படுகளில் இறங்குவது கண்டனத்திற்குரியதாகும். இவர்கள் நிச்சயமாக இனங்களுக்கிடையே முரன்பாடுகளை தோற்றுவிக்க முயலும் தீயசக்திகளின் நிகழ்சி நிரலின் கீழேயே செயற்படுகின்றார்கள் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment