Monday, November 19, 2018

டக்கிக்கு கதவடைக்கிறார் விக்கி!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி பிறிதொரு கூட்டணி அமைத்து எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலை எதிர்நோக்க தயாராகி வருகின்றார் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.

தமிழ் மக்கள் பேரவையின் ஒர் அங்கமாக இருந்த அவர் தற்போது தனக்கென ஒரு தனிக்கட்சியையும் ஆரம்பித்துள்ளார். விக்கியின் முதுகில் பயணிக்க இருந்த சில சில்லறை கட்சிகளுக்கு விக்கியின் தனிவழிப்பயண முன்னெடுப்பு சற்று புளியை கரைப்பதாகவே இருந்து வருகின்றது. ஆங்காங்கே மிரட்டல்களும், நிபந்தனைகளும் விதிக்கப்படுவதை உணர முடிகின்றது.

கஜேந்திரர்களுடனிருந்து சற்று விலகிப்போக முனைந்த விக்கி தற்போது தன்னிலை உணர்ந்துள்ளார். கஜேந்திரர்களை விட்டுச் சென்றால் போவற்கு இடமில்லை என்பதை உணர்ந்தும் உள்ளார் என்று கஜேந்திரர்கள் மார்தட்டிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், மீண்டும் கஜேந்திரர்களுடன் இணைந்து கொள்வதற்கு முனைப்புக்காட்டியுள்ள அவர் ஈபிடிபி க்கு ஒரு விடுகை விட்டுள்ளார். அது என்னவென்றால், ஈபிடிபி தவிர்ந்த சகல கட்சிகளும் தங்களுடன் இணைந்திருக்கலாமாம்.

ஈபிடிபியை விக்கினேஸ்வரன் இவ்வளவு வெறுப்பதற்கான காரணம் சின்ன குழந்தைக்கும் விளங்கும். விக்கி வடமாகாண சபையை நாசம் கட்டியபோது, விக்கியை நிப்பாட்டி வைத்து கேள்வி கேட்ட ஒரே ஒரு மகன் தவராசா என்கின்ற ஈபிடிபி உறுப்பினர் என்பது யாவரும் அறிந்தது.


No comments:

Post a Comment