Monday, November 19, 2018

„நீ ஐக்கிய தேசியக் கட்சியாய் மாறிவிட்டாய்" அனுர மீது சீறிப்பாய்ந்த தினேஸ் குணரத்ன.

இன்று நண்பகல் 12 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம் சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடியது. இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தெரிவிக்குழு அமைக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதருக்கான செலவீனங்களை நிறுத்துவது குறித்தும் யோசனைகள் ஆராயப்பட்டபோது, ஒரு கட்டத்தில் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திசாநாயகவிற்கும் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜேவிபி யின் தலைவர் அனுர குமார திஸாநாயகவைப் பார்த்து „நீ ஐக்கிய தேசியக் கட்சியாக மாறிவிட்டாய்" என அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக விமர்சித்துள்ளார். இதனை அடுத்து சினமடைந்த அனுரகுமார எம்.பி 'நான் ஐக்கிய தேசியக் கட்சியாக செயற்படவில்லை. ஆனால் உங்களின் தந்தை ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக் காரர், முதலில் தகுதியான வார்த்தைகளை பயன்படுத்த பழகுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

கூட்டத்தில் இருந்த ராஜித சேனாரத்ன எம்.பி' இவரது தந்தை மட்டுமல்ல தாத்தாவும் ஒரு ஐக்கிய தேசியக் கட்சிக் காரர்தான்' என அமைச்சர் தினேஷ் குணவர்தனவை பார்த்துக் கேலியாக கூறினாராம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com