Thursday, November 15, 2018

பாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கத்தியுடன். இதோ படம்.

இன்று பாராளுமன்று கூடியபோது, மக்கள் பிரதிநிதிகள், காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டதுடன் சிலர் சிறுகாயங்களுக்கும் உள்ளாகியிருந்தனர் என்பது யாவரும் அறிந்தது.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவாரப்பெரும கத்தியொன்றுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை தாக்குவதற்கு பதுங்குவதை கீழுள்ள படங்களில் காணமுடிகின்றது.

இவ்வாறான காடையர்களை பாராளுமன்றுக்கு அனுப்பி வைத்த மக்கள் இதற்கான முழுப்பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பாராளுமன்றத்திற்குள் ஏற்பட்ட அமைதியற்ற நிலமைக்கு சபாநாயகரே பொறுப்புக்கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (15) பாராளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் தனது ஆசனத்தில் அமர்ந்து இருந்த காரணத்தினால் தான் இவ்வாறு அமைதியற்ற நிலமை ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு தனது ஆசனத்தில் இருந்து எழுந்து சென்றிருந்தால் இவ்வாறான நிலமை ஏற்பட்டிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கூரிய ஆயுதங்களுடன் பாராளுமன்றத்திற்குள் வந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





No comments:

Post a Comment