அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடைசெய்யக் கோரிய பிரேரணை இன்று பாராளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டாளி சம்பிக்க ரணவக்கவினால் முன்மொழியப்பட்டு ரஞ்சித் மத்தும பண்டாரவினால் வழிமொழியப்பட்டது.
பிரேரணை மீதான விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, பிரேரணைக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 0 வாக்குகளும் பதிவாகின. அதாவது ஆழும் கட்சியினர் வாக்கெடுப்பினை பகிஸ்கரித்தனர்.
இத்துடன் இன்றைய பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுபெற்று அடுத்த அமர்வு எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இன்றைய பாராளுமன்ற அமர்விலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று பிரதமருக்கான செலவினங்களை தடை செய்யும் பிரேரணை நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று அமைச்சர்களுக்கான இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர் சிக்கல்களை உருவாக்கும் என்பதில் ஐயம் இல்லை.
No comments:
Post a Comment