ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பைபிளால் எறியவே இல்லையாம்.
கடந்த 16ம் திகதிய பாராளுமன்ற வன்செயல்நிகழ்வுகள் தொடர்பில் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பெரும் விமர்சனத்திற்குரியவராகியுள்ளார். இவர் பொலிஸார் மீது கதிரை கொண்டு தாக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில் இக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்து அவர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதம் 16 ம் திகதி பாராளுமன்ற கூட்டதொடரின் போது நான் புனித பைபலை தூக்கி எறிந்ததாக ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரம சிங்க அவர்கள் சமூக வலைத்தளங்களின் ஊடாக செய்திகள் பரப்பி வருகின்றார். என்மீதான இக்குற்றசாட்டை வன்மையாக கண்டிக்கின்றேன். நான் எனது மத்தை புனிதமாக மதிப்பவன். நான் கத்தோலிக்க மதத்தவன். நான் எனது மதத்தை எவ்வளவு உயர்வாக மதிக்கின்றேன் என்பது தொடர்பாக கத்தோலிக்க மத தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
என் மீதான தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ள மதத்தை ஆயுதமாக கையில்லெடுத்துள்ளனர். எம் மீது சேறு பூச முயற்சிப்பது அவர்களின் பலவீனத்தை காட்டியுள்ளது. நாம் ஜனநாயகத்தை காக்கவும் சபாநாயகரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிர்பையே தெரிவித்தோம். இவ் எதிரப்பை மத அடிப்படையில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல எத்தனிக்கின்றனர்.
எதிர்கட்சியின் கத்தோலிக்க அமைச்சர்களான நிரோசன் பெரேராஇ ஹரின் பிரனாந்துஇ ரஞ்சன் ராமநாயக்க ஆகியோர் ஆளும் கட்சியின் நடவடிக்கைகளுக்கு சேறுபூசுவதற்கு மதத்தை ஊடகமாக பயன்படுத்தியமை பாவச்செயலாகும்.
அரசமுத்திரை பதித்த புத்தகத்தை புனித பைபிளாக உருவகித்து மதத்தை அரசியலாக்க முனைந்தமை வெட்கப்பட வேண்டிய விடயம் என அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment