தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு, ஜக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளமையானது , கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரமன்றி தமிழ் மக்களையும் ஏமாற்றும் செயல் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் தொடர்பாக அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இது நாங்கள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், ஒரு அரசியல் சாசன அடிப்படையில் நாட்டை நிர்வகிக்கும் நிலையை உருவாக்குவதற்கும், மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் அமர்த்தியமை மற்றும் பிரதமர் ஆக்கியமை தவறு என்ற அடிப்படையில் தான் நாங்கள் நீதிமன்றம் செல்ல இருக்கின்றோம்.
அதற்காகதான் சத்தியக் கடிதாசி தேவை. யார் ஆட்சி அமைக்கிறார் என்பது எமக்க பிரச்சினை அல்ல என்று இதுவரை கூறிவந்த சம்பந்தன் நேற்று மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அல்லது ஐக்கியதேசியக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு இருப்பதாக தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேரிடமும் கையெப்பமிட்ட அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இது உண்மையாகவே தமிழ் மக்களை ஊடகச் செய்திகள் மூலம் ஏமாற்றுகின்ற வகையிலும் மாறி மாறி மாறுபட்ட கருத்துக்களை கூறிவந்தவர், இதிலும் குறிப்பாக தாங்கள் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று கூறிவந்தவர், சத்தியக்கடதாசியில் கையொப்பமிட மாட்டோம் என சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிவந்த நிலையில், இல்லை அது ஆட்சி அமைப்பதற்கான கடிதம் அல்ல நீதிமன்ற செல்வதற்கான கடிதம் என்று கூறியவர்கள் எந்தவிதமான முன் நிபந்தனைகளும் இல்லாமல் மீண்டும் ரணில்விக்கிரம சிங்கவை பதவியில் அமர்த்துவதற்கான முடிவு எடுத்து அதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையொழுத்தையும் பெற்று அனுப்பியுள்ளார்.
ஆகவே வெறுமனே மக்கள் மாத்திரம் ஏமாற்றவில்லை தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment