கொலைச் சந்தேக நபரான அர்ஜூனவின் மெய்பாதுகாவலரை தொடர்ந்தும் விளக்க மறியிலில் வைக்க உத்தரவு.
கனியவள கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி இம்மாதம் 23ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 28ம் திகதி முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கனியவள கூட்டத்தாபனம் சென்றிருந்த போது அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த துப்பாக்கிப்பிரயோகத்தில் 31 வயதுடைய கனியவள கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் , சம்பவம் தொடர்பில் குறித்த பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் கைது செய்யப்பட்டு 5 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment