Monday, November 12, 2018

அனந்தியும் தனி வழி! பிரபாகரன் பாணியில் செயற்படப்போறாவாம்!

வன்னியில் சிறுவர்களை இறுதி நேரத்தில் வகைதொகையின்றி படையில் இணைத்ததில் பெரும்பங்காற்றியவர் எழிலன் எனபடும் சசிதரன். இவர் அவ்வாறு படையில் இணையாத இளைஞர்களையும் அதற்கு எதிர்ப்பு காட்டிய பெற்றோரையும் தனது கையால் கருணை காருணியம் இன்றி சுட்டுத்தள்ளியவர் என்பது வன்னி மக்கள் அறித்த உண்மை.

இருந்தபோதும், கடந்த மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக களம் இறங்கிய எழினனின் மனைவி அனந்தி மக்களால் தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டு விக்கினேஸ்வரனுடன் கூட்டுச் சேர்ந்தார். அத்துடன் தனது பெயரில் ஒரு கட்சியும் விலைக்கு வாங்கிக்கொண்டார். அவ்வாறு கட்சியை வாங்கிக்கொண்ட அவர் தனது கட்சியில் விக்கினேஸ்வரன் போட்டியிடவேண்டும் என்று எதிர்பார்த்தார். அனால் விடயம் பிசகிப்போய் விட்டது.

தற்போது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் விக்னேஸ்வரன் அணியுடன் கூட்டு வைக்கப் போவதில்லையென்றும் தமது கட்சி சுயேட்சையாகவே களம் இறங்கும் என்றும் அறிவித்துள்ளார் அனந்தி சசிதரன்.

அத்துடன் பயங்கரவாதியான பிரபாகரனால் தமிழ்ச்செல்வன், எழிலன் போன்றவர்கள் அரசியலுக்கு இனங்காட்டப்பட்டுள்ளனர் என்றும் அப்படிப்பட்ட போராளிகளை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறக்க வேண்டிய வேலைகளை தனது கட்சி மேற்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com