Thursday, November 22, 2018

நாளையும் பாராளுமன்றில் பொதுமக்களுக்கான கலரி மூடியாம். தெரிவுக்குழுச் சிக்கல் தொடர்கின்றது.

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அரசியல் கட்சித் தலைவர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் 12 பேர் இடம் பெறல் வேண்டும்.

புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர், தெரிவுக்குழுவில் மாற்றம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஆழும்கட்சியான தமக்கு பெரும்பாண்மை உறுப்பினர்கள் வழங்கப்படவேண்டும் என மைத்திரி-மஹிந்த தரப்பு கோரியுள்ளதுடன், தமது தரப்பிலிருந்து 7 உறுப்பினர்களின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளது.

நேற்று சபை முதல்வர் தினேஸ் குணவர்தன பாராளுமன்ற செயலாளருக்கு தமது கோரிக்கை தொடர்பான கடிதம் அனுப்பி வைத்துள்ளதுடன் பின்வரும் உறுப்பினர்களின் பெயகளையும் பரிந்துரைத்துள்ளார்.

1. தினேஸ் குனவர்கன
2. நிமல் சிறி பாலடி சில்வா
3. மகிந்த சமரசிங்க
4. திலங்க சுதிபா
5. எஸ்.பி.திஸாநயக்க
6. உதம்கம்மன்பில
7. விமல் வீரவங்ச

இதேநேரம் மக்கள் விடுதலை முன்னணியினர்
1. விஜிதஹேரத்
2. வைத்திய நலிந்த ஜயசிங்க
ஆகியோரை தெரிவுக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளனர்.

நாளைய தின சபை நடவடிக்கைகள் சிக்கலின்றி முன்னெக்கப்படவேண்டுமாயின் தெரிவுக்குழுவின் நியமனம் அவசியமாகியுள்ள நிலையில், இக்கோரிக்கை மீண்டுமோர் சிக்கலை உருவாக்கியுள்ளது. பெரும்பாண்மைக் கட்சிக்கு பெரும்பாண்மை உறுப்பினர்கள் வழங்கப்படவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பெரோரா தமது கட்சியில் இருந்து 7 பேர் தெரிவு செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எனவே இவ்வியடம் நாளை பாராளுமன்றில் சூடுபிடிக்கும் என நம்பப்படுகின்றது.

இந்நிலையில் நாளை பாராளுமன்றின் பொதுமக்கள் கலரி மக்களுக்காக திறக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment