மஹிந்தவே நம்பிக்கைக்குரிய தலைவராம்! தர்மரத்ன தேரர் புகழாரம்:
தற்போதைய நாட்டின் அரசியல் சூழ்நிலையில், சர்வதேச நாடுகள் தலையிடுவது தொடர்பாக மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத தன்மை உருவாகியது. இந்நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து மக்களுக்கான அரசாங்கத்தினை தெரிவு செய்யும் பொறுப்பை மக்களிடத்தே கையளித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கை வைக்க கூடிய தலைவர் மகிந்த ராஜபக்ஷ மட்டுமே என முதியன்கவற விகாரைக்கு பொறுப்பான தேரர் பேராசிரியர் முருந்தெனிய தம்மரத்ன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் நிறைவேற்று அதிகாரியும் சட்டவாக்க அதிகாரியும் முரண்படும்போது அதுதொடர்பில் மக்களின் தீர்ப்பை பெறுவதே ஜனநாயக முறையாகும். அதனாலே ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து மக்களின் தீர்ப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்தார் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
பாராளுமன்றம் கலைத்தத்து சட்டவிரோதம் என தெரிவித்து சில அரசியல் கட்சிகள் நீதிமன்றம் சென்றுள்ளன. அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமை. நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கின்றோம் என்றும் கூறியுள்ளார்.
எது எவ்வாறாயினும் அவர் இக்கருத்தை வெளியிட்டபோது அங்கு குழுமியிருந்தவர்கள் கூ இட்டதும் அவர்களை அமைச்சர் அடிக்க துரத்தியதும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயங்களாகும்.
0 comments :
Post a Comment