சஜித்திடம் கட்சியின் தலைமை பொறுப்பை கையளியுங்கள். மாத்தளை மேயர் ரணிலுக்கு கடிதம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவிற்கு வழங்குமாறு கோரி, மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அளுவிகாரே ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆரம்பத் தலைவர்களான டி.எஸ். சேனாநாயக்க முதல் ஆர். பிரேமதாஸ வரை ஆற்றிய சேவைகளை டல்ஜித் அளுவிகாரே தனது கடித்தில் நினைவுபடுத்தியுள்ளார்.
எனினும், 1994 ஆம் ஆண்டிலிருந்து ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் இதுவரை கட்சிக்கோ, கட்சி ஆதரவாளர்களுக்கோ நிலையான வெற்றியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை எனவும் அதற்கு காரணமான 11 விடயங்களையும் அவர் இந்தக் கடிதத்தில் நினைவுபடுத்தியுள்ளார்.
கட்சியின் தலைமைத்துவத்தைத் தேவையான விடயங்களின்போது இலங்கையின் கலாசாரத்துடன் இணைத்து செயற்பாடாமை
கட்சிக்குள் உள்ளக ஜனநாயகத்தில் சரிவு ஏற்பட்டமை
செயற்குழுவின் அதிகாரம் ஒரு தரப்பினக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை
தலைமைத்துவம் கீழ்மட்ட கட்சி ஆதரவாளர்களின் குரலை செவிமடுக்காமை
1994 ஆம் ஆண்டின் பின்னர் இரு தடவைகள் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில்
அமைச்சரவையில் சந்தர்ப்பம் வழங்காமை
பல்வேறு காரணங்களால் கட்சியை விட்டுச்சென்றவர்களுக்ளை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு உரிய திட்டங்களை முன்னெடுக்காமை
கீழ்மட்டத்தில் கட்சியின் செயற்பாடுகளை உறுதியாக முன்னெடுக்காமை
கட்சியின் உயரமட்ட பதவிகளுக்கு டி.எம். சுவாமிநாதன், திலக் மாரப்பன, மலிக் சமரவிக்ரம, ஆஷூ மாரசிங்க போன்ற மக்களின் உணவர்களை அறியாத மற்றும் வாக்கு வங்கி அற்றவர்களை தெரிவiசெய்தமை.
கட்சியின் சிங்கள பௌத்த புராணத்தையும் கிராமிய மக்கள் பலத்தையும் பாதுகாபப்தற்கு சிறந்த திட்டங்களை முன்னெடுக்காமை
மத்திவங்கியில் இடம்பெற்ற முறிகள் விநியோக சம்பவம் தொடர்பிலான பிரச்சினையை மக்களுக்கு தெளிவுபடுத்தாமை
சந்தர்ப்ப அரசியல் நிலைமைகளின்போது திறம்பட முகாமைத்துவம் செய்யாமை
போன்ற விடயங்களை மாத்தளை மாநகர மேயர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, இந்த நிலமையில் இருந்து கட்சியை மீட்டெடுத்து, வெற்றிப் பாதைக்கு கொண்டுசெல்வது தற்போதைய சூழ்நிலையில் இன்றியமையாது எனவும் பெரும்பாலான மக்களின் கோரிக்கையான சஜித் பிரேமதாஸவிற்கு தலைமைத்துவத்தை கையளிக்குமாறும் மாத்தளை மாநகர மேயர் டல்ஜித் அளுவிகாரே, ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
0 comments :
Post a Comment