சகலவற்றுக்கும் சபாநாயகரே பொறுப்பாம்! கூறுகின்றார் வீரவன்ச
நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள் அனைத்திற்கும் கரு ஜயசூரியவே பொறுப்பு சொல்ல வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் தற்பொழுது நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகள் சட்ட ரீதியானதா என்ற கேள்வியும் எழுப்பினார்.
உச்ச நீதிமன்றின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில், நாடாளுமன்றம் கூட்டப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டத்திற்கு அமைய அரச ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.
அதிகார மோகத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியினர் இவ்வாறு குழப்பங்களை செய்து வருகின்றனர்.
நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் முரண்பாட்டு நிலையை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரியவினால் சர்வாதிகார அடிப்படையில் செயற்பட முடியாது.
இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையீடு செய்வதனை நோக்கமாகக் கொண்டு கரு ஜயசூரிய உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment