Sunday, November 4, 2018

இலங்கை மீதான ஆக்கிரமிப்பு குழுவுக்கு தலைமை தாங்கியவராம் சு. சுவாமி. போட்டுடைக்கின்றார் ஐ.தே.க எம்பி

பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமனம் பெற்றதை அடுத்து அவருக்கான முதலாவது வாழ்த்தை ருவிட்டரில் வெளியிட்டவர் சுப்ரமணியன் சுவாமி. இவர் மஹிந்த ராஜபக்சவின் நெடுங்கால நண்பன் ஆவார்.

மஹிந்த ராஜபக்க பிரதமராக பதவியேற்றவுடன் தனது மகிழ்சியை தெரிவித்ததுடன், இலங்கையில் தமிழ் மக்கள் மஹிந்தவை ஆதரிக்கவேண்டும் என்றும், இனப்பிரச்சனைக்கு தீர்வாக பலமான மாநில சுயாட்சி முறையிலான தீர்வொன்றுக்கு செல்வதாயின் தனது ஆதரவை அளிக்க தயாரா இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சுப்பரமணிய சுவாமி 1980 ல் இலங்கை மீது இந்தியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு குழுவுக்கு தலைமை தாங்கியவர் எனத் தெரிவித்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம்.

அவர் இது தொடர்பில் கூறுகையில் :

எமது நாட்டு ஜனநாயகத்திற்கு எதிரான இந்த சதிக்குப் பின்னால் ஒத்துழைப்பு வழங்குபவர்கள் யார் என்றால் புதுமையாக இருக்கிறது.

மஹிந்த ராஜபக்ச ஒரு தேசப்பற்று, இனப்பற்றாளன் என்று முதன் முதலாக வாழ்த்து தெரிவித்திருக்கின்றார் பா.ஜ.க மூத்த உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி.

இந்த சுப்ரமணியன் சுவாமி என்பவர் யார் என்பது தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜெரி டி சில்வாவின் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்.

இலங்கையை ஆக்கிரமிப்பு செய்வதற்காக இந்திய அமைதி காப்பு படையினர் இங்கு வருவதற்கு முன்னர், அங்கிருந்து மிகப்பெரிய ஆக்கிரமிப்பை செய்வதற்கு படகொன்றின் மூலம் இலங்கைக்கு வந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க தலைமைதாங்கியவர்தான் சுப்ரமணியன்சுவாமி. அவர்தான் மஹிந்த ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றார்.

அதனை ஆழமாக சிந்திக்க வேண்டும். எமது நாட்டை பலவீனப்படுத்த எவ்வகையான நாட்டுத் தூரோகிகள் செயற்படுகிறார்கள். தேசப்பற்று என்ற பெயரில் இப்படி முன்வந்திருப்பவர்களையிட்டு கவலையடைகிறோம். பலதடவை நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை எதிர்க்கும் எமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com