அனந்திக்கு தாமரை மொட்டை நீட்டுகின்றார் கருணா!
புலிகளின் மட்டு அம்பாறை தளபதியாகவிருந்து இலங்கை அரசின் பிரதி அமைச்சராகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் செயற்பட்டவர் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன்.
அவர் தற்போது தனது சக தளபதியின் மனைவியான அனந்தி சசிதரனை மஹிந்த ராஜபச்சவுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தனது ட்வீடரில் மேற்படி வேண்டுதலை விடுத்துள்ள அவர் உங்களுடைய புதிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என்றும் நாங்கள் இணைந்து செயற்படுவதன் ஊடாக காணமல்போனவர்களுக்கான தீர்வினை கண்டு கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அனந்தி தனியாக கட்சி தொடங்கி தனித்தே செயற்படப்போகின்றேன் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனோ செய்படமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment