Saturday, November 3, 2018

அத்துரலிய ரத்ன தேரர் நாளை...

ஜாதிக ஹெல உறுமயவின் முக்கியஸ்தரான அத்துரலிய ரத்ன தேரர் நாளை தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அவர் நாளை ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை கூட்டி, நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்தநிலை, இது தொடர்பில் தான் எடுக்கவுள்ள நிலைப்பாடு தொடர்பாக விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

மஹிந்த ராஜபக்ச அரசில் இருந்த தேரர், அரசினை விட்டுவெளியேறி 2014 ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பதும், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக இரவு பகலாக மேடைகளில் முழங்கியவர் என்பதும் யாவரும் அறிந்தவிடயம்.

தற்போது அவர் தனது கட்சியான ஜாதிக்க ஹெல உறுமயவுடன் முரண்பட்டு பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கிவரும் நிலையில், இவ்வறிப்பை விடுத்துள்ளார். அவர் எடுக்கவிருக்கும் தீர்மானம் தொடர்பில் பௌத்த சிங்கள மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment