பாராளுமன்றத்தில் அமளிதுமளி சபாநாயகர் காயத்துடன் வெளிநடப்பு. (வீடியோ)
இன்று காலை 10 மணி அளவில் இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியது. இக்கூட்டத்தொடரின் ஆரம்பத்தின்போது மகிந்த இராஜபக்ஷ அவர்கள் விசேட உரையொன்றை ஆற்றினார். அவரின் உரையின் பின் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் பிரதமர் அவர்களின் கருத்துக்களில் எவ்வித நம்பகதன்மையும் இல்லையென பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அமைதியற்ற சூழ்நிலை உருவாகியது. இச்சூழ்நிலையில் சபாநாயகர் அவர்கள் பாராளுமன்றத்தை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற கண்டிமாவட்ட திலுனு அமுலுகம சபாநாயகரின் ஒலிவாங்கியை முறித்த வேளையில் அவரது கையில் காயமடைந்து சபாபீடத்தில் இருந்து இரத்தம் ஒழுக வெளியேறினார்.
இவ் அமைதியற்ற சூழ்நிலையானது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காகவா அல்லது சொந்த இலாபத்திற்காகவா நடைபெறுகின்றது என்பது தொடர்பாக சிந்திக்கவேண்டியுள்ளது.
நாட்டின் இறைமை தங்கியுள்ள பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தினுள் இத்தகைய சூழ்நிலையினை ஏற்படுத்துவது இன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்தமட்டில் எல்லா மக்களையும் சிந்திக்க தூண்டவைக்கும் ஓர் விடயமாகும்.
மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்வோரின் செயற்பாடுகளை கீழுள்ள இரு வீடியோக்களில் காணலாம்.
0 comments :
Post a Comment