வடிவேல் - சேனநாயக்க மீண்டும் பல்டியா?
அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் வசந்த சேனாநாயக்க மற்றும் வடிவேல் சுரேஸ் ஆகியோர் இன்றையை அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்திருந்தார். அதேநேரம் நான் அமைச்சுப்பதவியை மாத்திரமே பெற்றிருந்தேன் கட்சியை விட்டு செல்லவில்லை என தெரிவித்த வடிவேல் சுரேஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கம் உட்கார்ந்திருந்தார். இவ்வாறான நிலையில் இவர்கள் இருவரும் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
பெரும்பான்மை இருக்கும் தரப்புடன் தான் இருப்பதாகவும், புதிய அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளதால் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்திருந்த வசந்த சேனாநாயக்க தற்போது அரசின் பக்கம் சென்று அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளாராயின், அரசின் பக்கம் பெரும்பாண்மை வந்து விட்டதா என்ற கேள்வி எழுகின்றது.
0 comments :
Post a Comment