Friday, November 30, 2018

வவுணதீவில் இரு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் கழுத்தறுத்துக் கொலை. பொலிஸ் உயர் மட்ட குழு ஸ்தலத்தில்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரு பொலிஸ் கொஸ்தாபல்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குனரை இலங்கைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது, ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் மீதும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் ஓரிரு தினங்களில் குற்றவாளிகள் மற்றும் பின்னணி தொடர்பில் கண்டு பிடிக்க முடியும் என்று கூறினார்.

சம்பவத்தை தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருடன் பொலிஸ் மா அதிபர் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்தின சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவின் விசேட அணி ஒன்றை நியமித்துள்ளதுடன், தேவை ஏற்படி விசேட அதிரடிப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறு பணித்துள்ளதாக இலங்கைநெற் அறிகின்றது.

சம்பவத்தில் கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய கணேஸ் தினேஸ் மற்றும் காலிப் பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடை வல்பிட்ட கமகே நிரோசன் இந்திக்க பிரசன்ன எனும் இரு கொஸ்தாபல்களே மரணமடைந்துள்ளனர்.



கொலை சம்பவம் இடம்பெற்றுள்ள பகுதி




பொலிஸ் உயரதிகாரிகள் ஸ்தலத்தில்

No comments:

Post a Comment