விக்கி மூக்கை பொத்தினால் வாயை திறக்க தெரியாத குழந்தையாம் சொல்றார் வட மாகாண முன்னாள் அமைச்சர்.
மூக்கைப் பொத்தினால் வாயைத் திறந்து மூச்சுவிட்டு தன் உயிரைக் காப்பாற்றத் தெரியாத ஒருவராக முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்பட்டார் என வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் தனது பதவிக்காலத்தில் மாகாண சபையினூடாக மக்களுக்கான எந்த நிவாரணங்களையும் வழங்காதவராக அடுத்த சபைக்கும் போட்டியிட முனையும் இத்தருணத்தில் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் முன்னாள் முதலமைச்சரின் இயலாமை தொடர்பாக தனது முகநூலில் பதிவிடுகையில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு அவர் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களில் என்றும் மக்களால் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திப்பணிகளுக்கான நிதியத்தை உருவாக்குவதில் அவரது இயலாமை எவ்வாறு இருந்தது என்பதை டெனீஸ்வரன் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டு முதலமைச்சர் நிதியத்திற்கான நியதிச்சட்டம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஆளுநர் அதனை அனுமதிக்க முடியாது எனக் கூறியிருந்தார்.
அதன்பிற்பாடு அமைச்சர் வாரிய கூட்டத்தின் போது நான் தெரிவித்தேன், ஆளுநர் அனுமதிக்காவிட்டால் என்ன நாம் Trust Ordinanceகு கீழ் முதலமைச்சர் நம்பிக்கை நிதியத்தை உருவாக்க முடியும் என்று. அப்பொழுது முதலமைச்சர் பின்னர் பார்ப்போம் என்றார். சில மாதங்களின் பின்னர் மீண்டும் நினைவு படுத்தினேன். அப்பொழுதும் பின்னர் பார்ப்போம் என்றார். சில மாதங்களின் பின்னர் மாகாண சபையிலும் இது தொடர்பில் பிரஸ்தாபித்தேன். நான் சின்னப் பெடியன் என்பதனாலோ என்னவோ எனது கருத்தை கணக்கில் எடுக்கவில்லை. நான்கூறிய போது அதனை செவிமடுத்து Trust Ordinance கு கீழ் இவ்விடயத்தை கையாண்டிருந்தால் எமது புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் ஓரளவிற்கேனும் எமது மக்களின் வறுமையை ஒழித்திருக்க முடியும். அப்பொழுதுதான் பலர் தலைக்கணம் பிடித்து செய்ய வேண்டிய வேலையை செய்யாது விதண்டாவாதம் அல்லவா செய்துவந்தார்கள். மற்றும் நீங்கள் பெரியவரா அல்லது சமயம் ஐயா பெரியவரா என்ற பனிப்போர் அல்லவா நடந்தேறியது. இவ்விடயத்தினால் தற்போது நாம் எங்கு நிற்கின்றோம் என்பதை சற்று தூரநோக்கோடு யோசித்துப் பாருங்கள்.
0 comments :
Post a Comment