ரிஎன்ஏ என்பது என்றுமே எங்களுடன் இருந்த அமைப்பு அல்ல அவர்கள் தற்போது, ரணிலுக்கு ஆதரவு என தெரிவித்துள்ளார்கள். இருந்தபோதும் அங்கே இருக்ககூடிய இந்நாட்டை நேசிக்கின்ற சிலர் எம்முடன் இணைந்துள்ளார்கள், இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார் கோத்தபாய.
முப்பது வருடம் இடம்பெற்ற யுத்தத்தில் ஈடுபட்டு உயிரிழந்த படையினருக்கு சாந்தி செய்யும் நோக்கில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றிற்கு தலைமை தாங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு கருத்துரைத்த அவர் :
கடந்த ஆட்சிக்காலத்தில் நாட்டின் படையினருக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சகல சரத்துக்களும் அழிந்து கோகவேண்டும் என பிரார்தனை செய்கின்றேன் என்றும் உருவாக இருக்கின்ற அரசிடம் முதலில் அவற்றை துடைத்தெறியுங்கள் எனவும் வேண்டுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நீங்கள் மக்கள் பிரதிநிதிகளை பணம்கொடுத்து வாங்குகின்றீர்களே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
அது பொய்யான கதை. ஆனாலும் கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா 400 மில்லியன் டொலர்களை செலவளித்ததாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் செயலர் தெரிவித்திருந்தார். நாங்களும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூருக்கு சென்று பணத்தினை பெற்று வந்ததை அவதானித்தோம்.
அத்துடன் தற்போதிருப்பது குறுகிய காலத்திற்கான அரசாங்கம் என்றும் பலமான அரசொன்றை நிறுவுவதற்காக மக்களிடம் சென்று அவர்களது பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது எனது கருத்து என்றார்.
No comments:
Post a Comment