Thursday, November 22, 2018

தமிழ் மகா சாயா வை அழிக்க ஏன் கொந்தராத்துக்காரர்களுக்கு இடம் அளிக்கின்றீர்கள்?

பொலநறுவையில் கட்டிக்காக்கப்பட்டுவரும் புரதான சின்னங்களில் தமிழ் மகா சாயாவும் ஒன்றாகும். மகா பராக்கிரமபாகுவின் உன்னத படைப்புக்களில் ஒன்றான இந்த மகா சாயா வின் புனருத்தாரனத்தில் ஊழல் இடம்பெறுவதாகவும் இன மத பேதமின்றி இச்சொத்துக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என சாலிய குமார குணசேகர என்ற சிங்களவர் எழுதியுள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

பொலன்னறுவை புனித பூமியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்ட மிகப் பழமை வாய்ந்த தமிழ் மகா சாயாவை புனருத்தாரனம் செய்வதற்காக மத்திய கலாச்சார நிதியத்தினால் 2014 ம் ஆண்டு வேலைகள் தொடங்கப்பட்டன.

இன்று அதன் நிலை மிக கவலைக்கிடமான நிலையில் உள்ளது. தரமற்ற கட்டுமான பொருட்களைக் கொண்டு கட்டுமான வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அதுவும் எதிர்காலத்தில் அழியும் நிலையில் உள்ளது.

இம் மகா சாயாவை பற்றி பல தகவல்கள் மகாவம்சத்தில் இடம் பெற்றுள்ளது. அநுராதபுர இராஜ்ஜியத்தின் பின்னர் பொலன்னறுவை இராஜ்ஜியம் ஆரம்பமானது. இக் காலத்தில் மகாபராக்கிரமபாகுவின் ஆட்சி காலம். இக் காலத்தில் எல்லாத் துறைகளும் அதி உச்சமான வளர்ச்சியைப் பெற்றிருந்தது. இலங்கையை விவசாய நாடாக பெருமை அடைந்ததும் இக்காலத்தில் ஆகும்.

பொலன்னறுவை யுகத்தில் இந்தியாவில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 1200 கைதிகளைக் கொண்டே இம் தமிழ் மகாசாயா நிர்மாணிக்கப்பட்டது. இரண்டு மாடிக்கட்டிட அமைப்பில் உருவக்கப்பட்டுள்ளது.

மகாவம்சத்தில குறிப்புகளின் அடிப்படையிலும் தொல்பொருள் அகழ்வராய்ச்சியாளர்களின் கருத்து படியும்
மகாசாயவின் உயரம் -ரியன் 1300
சுற்று வட்டாரத்தின் அளவு- 600 மீற்றர்
அதன் உயரம்-25.65 மீற்றர் ஆகும்.

காலப்போக்கில் இம் மகாசாய சிதைவடையத் தொடங்கியது. 1982 ம் ஆண்டு மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் புனரூத்தாரன வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் வேலைகள் முழுமைப்பெறவில்லை.

2014ம் ஆண்டு மார்ச் 6ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இக்காலத்தில் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக கடமையாற்றினார். தொல்பொருள் திணைக்ளத்தின் முன்னாள் அகழ்வாராய்ச்சியாளர் பேராசிரியர் நிமல் பெரோரா இப் புனரூத்தாரண பணிகளின் ஆலோசகராக செயற்பட்டார்.

ஜந்து ஏக்கர் நிலப்பரப்பளவுக்கான கட்டுமான பணிகளில் மிக சிக்கலை உருவாக்கியது. இருப்பினும் கட்டிட இடிபாடுகளைக் கொண்டு இதன் வடிவம் குத்து விளக்கைப் போன்றுது என இணங்கண்டுகொண்டனர். ஆனால் இதன் கட்டுமான பணிகளை ஒப்பந்தக்காரர்களுக்கு அளித்து புரதான சொத்தொன்றின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டனர். டென்டர் அழைப்பின் மூலம் 1,30,000 செங்கற்களை கலாச்சார நிதியம் பெற்றுக்கொண்டது. ஒரு செங்கற்களுக்காக ரூபா 39 செலவிடப்பட்டது.

இவ்வாறு பெற்றுக்கொண்ட செங்கற்களின நிலையானது மழையில் நனைந்து மண்ணோடு மண்ணாகி விட்டது. கட்டித்தில் உள்ள செங்கற்களை விரல்களால் தொட்டாலும் நொறுங்கி போகும் நிலையில் உள்ளது. இதைப் பற்றி பொறுப்பான அதிகாரிகளிடம் கேள்வி கேட்க விளையும் போது எவ்வித பதிலும் கிடைக்க வில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த ஊழலின் பின்னனி தான் என்ன? புராதன சின்னங்கள் எமது அடையாளங்கள். அவற்றை பாதுகாக்க இனம் மொழி மதம் தேவையில்லை. கல்லாதவர் முதல் கற்றவர் எல்லோருக்கும் தமது பாரம்பரியங்களை பாதுகாக்கும் உணர்வு வேண்டும்.







No comments:

Post a Comment