பிரதி அமைச்சர் வியாழேந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான புதிய அரசாங்கத்தில் கிழக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக வியாழேந்திரன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். .
அவர் மேலும் கூறுகையில், “மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாடாளுமனற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவார்கள் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால் எமது கட்சியின் உறுப்பினரே மாறியுள்ளமை கேவலமான ஒரு செயல்.
வியாழேந்திரன் மீது ஏற்கனவே சந்தேகங்கள் இருந்தது, எனவே அவர் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து. அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கு நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்போம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய தேர்தல் திருத்தச் சட்டங்களின் பிரகாரம், உறுப்பினர் ஒருவர் கட்சி தாவினால் அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்துச்செய்யுமாறு, குறித்த கட்சி தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரலாம்.
ஆனால் அந்த உறுப்பினர் ஓர் அமைச்சராக பதவிப்பிரமானம் செய்துகொண்டால், உறுப்புரிமையை நீக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றார் தேர்தல்கள் ஆணையாளர்.
இதன்பிரகாரமே கட்சி தாவுகின்றவர்களுக்கு உறுப்புரிமையை பாதுகாக்கின்ற கவசமாக அமைச்சர் பதவி வழங்கப்படுகின்றது.
No comments:
Post a Comment