செல்லுபடியற்ற பாராளுமன்றின் தீர்மானம், செல்லுபடியற்றதாகும். மஹிந்தவே பிரதமர். கூறுகின்றார் தினேஸ் குணவர்த்தன
எவர் எது கூறினாலும் இந்நாட்டின் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே என்றும் செல்லுபடியற்ற பாராளுமன்றின் தீர்மானங்கள் செல்லுபட்டியற்றதாகும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன.
தொடர்ந்தும் மஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்படுவார் என்று தெரிவித்துள்ள அவர், பாராளுமன்றின் சபாநாயகர் சர்வாதிகாரியாவும் நகைச்சுவையாளனாகவும் பக்கசார்பாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சபாநாயகர் பாராளுமன்றின் சம்பிரதாயங்களுக்கு மாறாக செயற்பட்டு வருகின்றார் என்றும் சாடியுள்ளார்.
0 comments :
Post a Comment