ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறினேன். மனுஸ
இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நாட்டும் முகமாக மைத்திரி-மகிந்த அரசாங்கத்தில் இருந்து விலக ஸ்ரீ.சு.கட்சி உறுப்பினர் சிலர் முடிவெடுத்துள்ளனர். ஜனநாயகத்தையும் நிதியையும் நிலைநாட்டுவது எமது கடமையாகும். அதனாலேயே நானும் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்தேன் என பாரளுமன்ற அமைச்சர் மனுஸ நானாயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று நடைப்பெற்ற பாராளுமன்ற கூட்டதொடரின் பின்னரான ஊடவியளாலர் சந்திப்பின் போது அவர் மேலும் குறிப்பிடுகையில்:
பாராளுமன்றத்தில் 113 பெரும்பான்மை கிடைக்காத நிலையியே கலைக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்தும் புதிய அரசாங்கத்தின் அமைச்சு நியமனங்கள் நடைப்பெற்ற வண்ணம் இருந்தன. இது எந்த ஜனநாயக நாட்டிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயற்பாடு அல்ல.
நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர். உயர்நீதி மன்றத்தின் இடைக்கால உத்தரவு நீதியையும் ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்தியது என அவர் மேலும் தெரிவித்தார்
0 comments :
Post a Comment