இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதியை சந்திக்கின்றனர் பாரளுமன்ற உறுப்பினர்கள்.
நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்கள் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அவசரமாக சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராக நேற்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை ஜனாதிபதி நிராகரித்திருந்த நிலையிலேயே, அவரை நேரில் சந்தித்து அவை குறித்து கலந்துரையாட கட்சித் தலைவர்கள் தீர்மானித்திருக்கின்றனர.
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கைச்சாத்திட்ட கட்சிகளின் தலைவர்கள் சார்பில் விடுக்கப்பட்டிருதற்கு கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நவம்பர் 15 ஆம் திகதியான இன்று மாலை 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சியான ஜாதிக்க ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க உறுதிப்படுத்தினார்.
0 comments :
Post a Comment