சஜித் பிறேமதாஸ பிரதமர் வேட்பாளர், ஐக்கிய தேசியக் கட்சியிலுள் வலுக்கும் எதிர்ப்பு.
நாடாளுமன்ற பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரமதேச பெயர் முன் மொழியப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார். இதுவரை பேச்சுவார்த்தை மட்டுமே நடைப்பெற்றுள்ளதாகவும், உத்தியோகபூர்வமாக முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு கட்சியினுள் ஏற்பட்டிருக்கும் பலத்த எதிர்ப்பு காரணமாக இவ்வாறானதோர் முடிவுக்கு அக்கட்சி சென்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இந்நிiலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர சஜித் பிறேமதாஸவை பிரதமராக்கி ரணில் விக்கரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ரணில் விக்கிரம சிங்க அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற அத்தனையும் நடவடிக்கைகளும் சஜித் பிரமதேச அவர்களின் தலைமையிலும் நடைபெறும் என கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment