கல்முனை மக்களின் குடிநீர்க் கட்டணத்துக்கு ஆட்டையை போட்ட முகாமைத்துவக்குழு! 438 குடும்பங்கள் குடிநீரின்றி அவலத்தில்.
புதிய நிர்வாகம் குடும்பமொன்றிடமிருந்து 2500 ரூபாவை கோருகின்றது.
கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தின் பெயரால் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவினரால், அங்கு வாழும் 438 குடும்பங்களைச் சேர்ந்த மக்களால் குடி நீர் பட்டியலுக்கு செலுத்திய பெருந்தொகை பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு 921039 ரூபாவை மோசடி செய்த முகாமைத்துவக் குழுவினர் குடிநீர்க் கட்டணத்தை செலுத்தாமல் செயலிழந்து மாயமாகியதால், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை கடந்த 15.11.2018 ம் திகதியிலிருந்து நீர் விநியோகத்தை இடைநிறுத்தியுள்;ளதுடன் மக்கள் நீரின்றி பெரும் அவலத்தை சந்தித்துள்ளனர்.
குறித்த குழுவினருக்கு எதிராக மக்கள் பெரும் எதிர்ப்பார்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், புதியதாக உருவாகியுள்ள முகாமைத்துவக்குழுவினர், உடனடியாக நீரினை பெற்றுக்கொள்ளும்பொருட்டு, நீர்வழங்கள் சபைக்கு செலுத்தப்படவேண்டிய 9 லட்சம் பணத்திற்காக குடும்பங்கள் ஒவ்வொன்றிடமிருந்தும் 2500 ரூபாவை கோரி நிற்கின்றனர்.
இந்த அவலநிலையினுள் நுழைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்தார். அவ்வாறு அறிவிக்கப்பட்டமை முற்று முழுதான அரசியல் பிரச்சாரம் என குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு இதுவரை மக்களுக்கு நீர்வழங்கப்படவில்லை என்றும் புதிய நிர்வாகம் 2500 ரூபாவினை கேட்டு நிற்கின்றது என்றும் குடியிருப்பாளர்கள் நேற்று ஊடகங்களை அழைத்து பகிரங்கமாக அறிவித்தன் மூலாமாக ஹரிசின் முகத்தில் காறித்துப்பியுள்ளனர்.
இதேநேரம் மக்களின் பணத்தை விழுங்கிச் சென்றுள்ள முன்னாள் முகாமைத்துவக் குழுவினருக்கு எதிராக மக்கள் சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், இலங்கையின் சட்டத்துறையில் நம்பிக்கையற்ற குடியிருப்பாளர்கள் மேற்படி முகாமைத்துவத்தை சேர்ந்தவர்களின் வீடுகளை சுற்றிவளைத்து தாக்குதல் நடாத்தவேண்டும் என்று கோரிவருவதாக குடியிருப்பு மக்கள் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment