கூடிய பாராளுமன்று சில நிமிடங்களில் கலைந்தது. மீண்டும் 23ம் திகதி
பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்று நண்பகல் நான்காவது முறையாகவும் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடிய பாராளுமன்று அடுத்த அமர்வை எதிர்வரும் 23ம் திகதிக்கு ஒத்திவைத்து கலைந்தது.
பாராளுமன்று கூடுவதற்கு முன்னர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பேசி எடுக்கப்பட்ட முடிவுகளின் பிரகாரமே இவ்வாறு பாராளுமன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23 திகதி ஐக்கிய தேசிய முன்னணியினரால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை ஒன்று தொடர்பில் தொடர்விவாதங்கள் நடாத்துவதற்கு நிகழ்சி நிரலிடப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச அவர்கள் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றின் ஊடாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் அவரது காரியாலயத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்ய முடியாது என்று பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விவாதங்கள் மூன்று நாட்கள் இடம்பெற்று பின்னர் வாக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாராளுமன்ற அமர்வை பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு இன்று அனுமதி வழங்கப்படாத நிலையில் அமர்வில் செய்தி சேகரிப்பதற்கான அனுமதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment