Friday, November 16, 2018

வெல்லாவெளியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 19 வயது இளைஞன் கைது.

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஆனைக்கட்டு பிரதேசத்தில் 14 வயது சிறுமியை ஆசைவார்த்தை காட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவரை கடந்த திங்கட்கிழமை (12) கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள சிறுமியின் தந்தை வெளிநாட்டிற்கு வேலைவாய்பு பெற்று சென்றுள்ள நிலையில் தரம் 10 ஆண்டில் கல்வி கற்று வந்த சிறுமி கடந்த 6 மாதமாக பாடசாலை செல்லாது வீட்டில் இருந்து
வந்துள்ளார் இந்த நிலையில் சிறுமிக்கு குறித்த இளைஞன் கையடக்க தொலைபேசி ஒன்றை வாங்கி கொடுத்து, அவருடன் உரையாடி வந்ததாக கூறப்படுகின்றது. தாயார் ஏனைய குழந்தைகளுடன் தனியறையிலும்
சிறுமியை தனியறையிலும் படுத்துறங்கி வந்துள்ளனர்.

சிறுமி குறித்த இளைஞருடன் சேர்ந்து தனது அறையின் யன்னல் கிறிலின் ஆணிகளை கழற்றி, யன்னல் ஊடகாக இரவில் இளைஞன் அறைக்கு சென்று இருவரும் ஒன்றாக இருந்து வந்துள்ள நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை இரவு வழமைபோல இளைஞன் யன்னல் ஊடாக அறைக்குள் சென்ற போது அதனைக்கண்டு நாய் குரைத்துள்ளது.

இதனையடுத்து தாயார் கண்விழித்து மின்சார விளக்குகளை எரியவைத்து வீட்டை சோதனையிட்டபோது அறையில்இருநத இளைஞர் அங்கிருந்து யன்னல் ஊடாக தப்பி ஓடியுள்ளார்.

இதனைக்கண்ட தாயார் சிறுமியிடம் விசாரித்தபோது இளைஞர் தொடர்பாக தகவல் பெற்றுக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இளைஞரை திங்கட்கிழமை மாலை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும், சிறுமியை வைத்தியசலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார்
கூறுகின்றனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com