Tuesday, October 30, 2018

புளொட்டையும் ஈபிஆர்எல்எப் ஐயும் தமிழ் மக்கள் பேரவையிலிருந்து வெளியேறட்டாம். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து புளொட்டையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் யும் வெளியேற்ற வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனை தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் பேரவையிலிருந்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளை உடன் வெளியேற்ற வேண்டும். இரண்டு கட்சிகளும் கொள்கைக்கு முரணாக செயற்படுகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை தயாரித்த போது, புளொட் அதில் பங்களிக்கவில்லை. மாறாக அதை குழப்பும் முயற்சிகளில்தான் ஈடுபட்டது.

எமது தீர்வு திட்டம் தயாராகிக் கொண்டிருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அரசியலமைப்பு உருவாக்க வழிநடத்தல் குழுவில் அங்கம் வகித்தது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் தொடர்ந்து கொள்கைக்கு முரணாக செயற்பட்டு வருகிறது. தென்னிலங்கை கட்சிகளுடனும் கூட்டு வைத்துள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை விட தமிழரசுக்கட்சியே பரவாயில்லை“ என தெரிவித்தார்.

No comments:

Post a Comment