Monday, October 29, 2018

மைத்திரி , ரணில் மற்றும் மஹிந்தவின் அதிகாரப் போட்டியை எதிர்த்து மக்களை வீதிக்கழைக்கின்றது ஜேவிபி.

மைத்திரி, மஹிந்த, ரணில் மூவரி டையே ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது சாதாரண மக்களின் நன்மைக் கருதி ஆரம்பிக்கப்பட்டதல்ல. இந்த அதிகாரப்போட்டியானது தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும், தனது அதிகாரப் பலத்தை நிலைநாட்டிக் கொள்வற்கு மேயாகும். பொதுமக்களின் வாழ்வில் அழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த நாசக்கார மைத்திரி, மஹிந்த, ரணில் மூவருடைய அதிகார முகாம்களுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி வீதியில் இறங்கி பாரிய எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று (29) தற்போது நடைபெறுகின்ற விசேட ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மைத்திரி, மஹிந்த, ரணில் மூவருக்கிடையிலான அதிகாரப் போட்டியினால் தற்போது பெற்றோலியக்கூட்டுத் தாபனத்திலும் இரண்டு உயிர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகமும் நடந்துள்ளது.

இவர்களின் அதிகார முகாம்களுக்கு எதிராக, மக்கள் ஆட்சியை கட்டியெழுப்புவதற்கான பொறுப்பை மக்கள் விடுதலை முன்னணியான தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக மைத்திரி, மஹிந்த, ரணில் தரப்பில் இருக்கும் முற்போக்கானவர்களுடனும், இடதுசாரி காட்சிகள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், வியாபாரிகள் அனைவரையும் ஒன்றிணைத்த முற்போக்கு கூட்டணியோடு கலந்துரையாடப்படுவதாகவும், அவர்கள் அனைவருடனும் இணைந்து நவம்பர் முதலாம் திகதி நுகேகொடையில் பிரமாண்ட பேரணியை நடத்தப்போவதாகவும் தேறிவித்தார்.

அவர் மேலும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடிசூட்டுவதாலோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கு முடிசூட்டுவதாலோ மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்றும், ஆகவே மக்கள் ஆட்சியை கட்டியெழுப்ப தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அனைத்து ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment