எதிர்வரும் தேர்தலில் ராஜபச்சர்கள் தரப்பிலிருந்து களமிறக்கப்படவுள்ள வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தொடர்ந்து பல்வேறுப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், அடுத்த அரச தலைவர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கப் பொருத்தமானவர் பசில் ராஜபக்சவே எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச.
டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை சிறப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைகளை முடித்து வெளியேறிய கோத்தபாயவிடம், ஊடகவியலாளர்கள், எதிர்வரும் தேர்தலின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், குறித்த கருத்த தனது தனிப்பட்ட கருத்தேயாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு கருத்த தெரிவித்த அவர் :
தற்போதுள்ள அரசு மிக மோசமான நிலையில் உள்ளது. பொருளாதார, அரசியல் நிலைத்தன்மையற்று உள்ளமை வெளிப்படையாகத் தெரிகின்றது. இப்படியான அரசை வீட்டுக்கு அனுப்புவதே பொறுத்தமானதாகும். அதற்கு பொருத்தமான எதிர்க்கட்சியின் வகிபாகம் அவசியமானது.
எதிர்க்கட்சிகள் இணைந்து இதனைச் செய்ய வேண்டும். எவ்வாறு அதைச் செய்வார்கள் என் பது எனக்குத் தெரியாது. அதைச் சரியான தரப்பினர் முன்னெடுப்பர் – என்றார்.
No comments:
Post a Comment