Wednesday, October 31, 2018

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பு நேற்று நினைவு கூறப்பட்டது.

யாழ்மாவட்டத்தில் இருந்து 1990 ஒக்டோபர் 30 வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றப்பட்டதன் 28 ஆவது நினைவேந்தல் நேற்றைய தினம்(30) அனுஸ்டிக்கப்பட்ட நிலையில் யாழ் நகரின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் ஐந்து சந்தி பகுதியில் உள்ள சில கடைகள் மூடப்பட்டு கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

இதன் போது அப்பகுதியில் ஒன்று கூடிய யாழ் முஸ்லீம் மக்கள் ஒக்டோபர் 30ம் திகதியினை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்கள் தாம் ஒரு துக்க தினமாக அனுஷ்டிப்பதாகவும்இ தமது சொந்த இருப்பிடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட யாழ் மாவட்ட முஸ்லிம் குடும்பங்கள் இன்று மும்மடங்காக அதிகரித்த நிலையில் இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதி நிலையிலேயே தற்போது வாழ்ந்துவருகின்றனர் .

எனவே அவர்களை சொந்தமண்ணில் இன்றுடன் 28 வருடங்கள் கடந்தபின்பும் இலங்கை அரசு மட்டத்தில் அவர்களின் அபிலாசைகளை மதிக்கத்தக்க மீள்குடியமர்த்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஆறாத்துயரமாக கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.

எனவே தான் எதிர்காலத்திலாவது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களின் மீள்குடியமர்த்தலில் கூடுதல் கரிசனை கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என இதன் போது ஊடகங்களிடம் குறிப்பிட்டனர்.

பாறுக் ஷிஹான்







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com